கல்லூரியில் கல்வியமைப்பு
பட்டப்படிப்பைப் பெறுவதற்கான கால அளவு:
கல்லூரியில் சேர்ந்து குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் படித்தால் மட்டுமே ஒரு பட்டப்படிப்பையோ அல்லது சான்றிதழ் படிப்பையோ பெற முடியும். மாணவர்கள் எல்லோரும் பள்ளி அல்லது டிப்ளமோ படிப்பை முடித்தவுடன், அடுத்து என்ன செய்யலாம்? என்ற கேள்விக்கு விடை தேட முயன்று, எந்த படிப்பைப் படிக்கலாம்? எது வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்? எந்த கல்லூரியில் படித்தால் வேலை கிடைக்கும்? என்ற எத்தனையோ வினாக்களுடன் ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்குகிறார்கள். அங்கு முதல் ஆண்டில் 12 ஆம் வகுப்பின் தொடர்ச்சியாக அனைவருக்கும் பொதுவான வகையில் இருக்கும் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டில் தான், மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறை தொடர்பான பாடங்களைப் படிக்கத் துவங்குகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒருவர் கணினிப் பொறியியல் எடுத்திருந்தால், முதல் ஆண்டில் அடிப்படை பொறியியல் கணிதங்கள், கணினி மொழி, ஆங்கிலம் தொடர்பான பாடங்களும் அடிப்படை சார்ந்த கணினிப் பாடமும் மட்டுமே கற்பிக்கப்படும். மேலும் அங்குப் கற்கின்ற பெரும்பாலான கல்வி, மதிப்பெண் பெறுவதற்கு புத்தக அறிவை கற்பதில் மட்டுமே நின்று விடுவதால், நடைமுறை அறிவை (practical knowledge) கொடுக்கும் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. கல்லூரியில் மிகவும் குறுகிய, சம்பந்தப்பட்ட தலைப்புகளை மட்டுமே கற்பிக்கின்றனர். கல்லூரியில் இறுதி ஆண்டை அடையும்போது மட்டுமே, என்ன படிக்கிறோம்? அவற்றை ஏன் படிக்கிறோம்? என்ற புரிதல் கிடைக்கிறது. ஆனால், அதற்குள் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடுகிறது. கல்லூரி முடித்து வரும் போது அவர்கள் கொடுக்கும் வெறும் பட்டப்படிப்பும், சான்றிதழும், பெரு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனைப் பூர்த்தி செய்யப் பல சமயங்களில் தவறி விடுகிறது. இதனால் தான் பெரும்பாலான மாணவர்கள், வேலையில்லா பட்டதாரி ஆகிறார்கள்.
கல்லூரியில் மென்திறன்கள் ( Soft Skills):
தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தவும், அலுவல் சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்துரையாடவும் ஒருவர் சிறந்த தகவல் தொடர்புத் திறனைப் பெற்றிருத்தல் அவசியமாகிறது. குழுவாக இணைந்து பணியாற்றுதல் என்பது வேலையின் இன்றியமையாத ஒரு கூறாகும். தன்னுடைய குழுவை உற்சாகப்படுத்துவதற்கும், வேலையை சரியான நேரத்தில் முடித்துத் தருவதற்கும் தலைமைப் பண்புத் தேவைப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல் பணியில் நிலைத்திருப்பதற்கான ஒரு காரணி. கல்லூரியின் பாடத்திட்டம், தகவல் தொடர்பு திறன் (Communication skill), குழுப்பணி (teamwork), தலைமைத்துவம் (leadership), மற்றும் தகவமைப்புத் திறன் (adaptability skill) போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் நேரத்தை எவ்வாறு சரியாக நிர்வகிப்பது மற்றும் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது போன்ற மென் திறன்களை (Soft Skills) கற்றுக் கொண்டு, அதனை நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமெனத் தெரியாமல் போகிறது. கல்லூரியில், பாடத்திட்டத்திற்கும் வேலைக்குத் தேவையான திறன்களுக்கும் உள்ள இடைவெளியைப் புரிந்துகொள்வது இல்லை. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை முறையாக வழங்க முடியவில்லையே என மட்டும் வருத்தப்படுகிறார்கள். ஆனால், கற்பித்தலில் உள்ள இந்த இடைவெளியை சரி செய்ய அவர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
கல்லூரிகளில் செய்முறைப் பாடங்கள்:
பெரும்பாலான கல்லூரிகள், செய்முறையையும் (Practicals) செய்முறைத் தேர்வுகளையும் முறையாகக் கற்பித்து, அதனை முறையாக நடத்துவது இல்லை. எனவே மாணவர்களுக்கு முறையாகச் செய்முறைகளைச் செய்யத் தெரிவது இல்லை. இந்த வழியில் நடைமுறைகள் தெரியாமல், அவர்கள் நேர்காணல்களில் தேர்ச்சி பெற முடியாமல் போய் விடுகிறது. குறிப்பாகக் கணினி அறிவியல் அல்லது பொறியியல் தொடர்பான படிப்புகளில் அவர்களுக்குச் செய்முறை வகுப்புகள் அவசியம் தேவைப்படுகிறது. அவர்களிடம் செய்முறை அறிவு இல்லை என்பதால் அவர்களால் படித்த பாடங்களை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியாமல் போகிறது. சில கல்லூரிகளில், நடைமுறைக் கருவிகள் உள்ளன. ஆனால் அது அனைவருக்கும் போதுமானதாக இல்லை. அதனால் யாரோ ஒருவர் மட்டுமே அறிவைப் பெற இயலும். இதனால் மற்றவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழக்கிறார்கள். பெரும்பாலான செய்முறை பயிற்சியாளர்களுக்கே செய்முறை சார்ந்த முறையான பயன்பாடு தெரியாமல் உள்ளது. புத்தகத்தை மட்டும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி, கடைசியில் 80 முதல் 90 சதவீத மதிப்பெண் பெறும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். அவ்வளவு நல்ல மதிப்பெண்களை மாணவர்கள் பெற்ற போதிலும், அவர்களுக்கு கல்லூரியில் முறையான வழிகாட்டுதல் கிடைக்காமையால் அடிப்படை நடைமுறைத் திறன்கள் (practical skills) இல்லாமல் போகிறது. கல்லூரியில் நடைமுறை அறிவு ஏதும் பெறாததால் மூன்று வருடங்கள் வீணாகிறது. படித்த படிப்பைப் பற்றிய ஆழமான அறிவு அவர்களுக்கு இல்லாததால், அவர்களால் எந்த நேர்காணலையும் முறியடிக்க முடிவதில்லை. பிடித்த வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்கிறார்கள். அந்த வேலையில் அடுத்த நிலைக்கு முன்னேறவும் முடியாமல் இருக்கின்றனர். கல்லூரியில் மூன்று வருடப் படிப்பை முடித்த பிறகும் வேலை உறுதி இல்லை எனும்போது, மூன்று வருடக் கல்லூரி படிப்பும் வீணாகிறது. கல்லூரியில், அலுவலகத்தில் வேலை எப்படிச் செய்ய வேண்டும்? எப்படி வேலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதற்கான நேரடி வழிகாட்டுதல்கள் போதுமானதாக இல்லை.
வேலை வாய்ப்புகளுக்கான வழிகாட்டுதல்
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, படித்த படிப்பு தொடர்பான வேலையைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலான கல்லூரிகளில், வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுகிறது. ஆனால், சிலர் மட்டுமே நேர்காணல்களில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். கல்லூரி முடித்த பிறகும், நிறைய மாணவர்கள் தங்களுக்கான பணி வாய்ப்பினை அடையாமல் இருக்கிறார்கள். அதனால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, வேலை கிடைக்காத அந்த மாணவர்கள் சமூகத்தில் போராடுகிறார்கள். பிறகு படிப்பிற்குச் சம்பந்தமில்லாத ஊழியராக ஏதோ ஒரு வேலை பார்க்கிறார்கள். மேலும் அவர்களில் சிலருக்கு வேலை கிடைக்குமா? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இங்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருந்தும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நடைமுறை திறன்கள் மாணவர்களால் பூர்த்தி செய்யப்படுவதில்லை.
அச்சமயத்தில் தான் மாணவர்கள், வாழ்க்கை தொடர்பான கல்வியைக் கற்க முயல்கிறார்கள். அதுவரை படித்த அத்தனை பாடங்களும் அவசியம் இன்றி போய்விடுகிறது. அனைத்தையும் புதிதாகப் படிக்கத் தொடங்குவதோடு வாழ்க்கையின் அனுபவங்களை அச்சமயத்தில் தான் கற்றுக் கொள்கிறார்கள். அதன் பின்னர் மாணவர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பினை இந்த சமூகத்தில் தாங்களே தேடிக் கொண்டு கடைசியாக ஒரு வேலையில் அமர்கிறார்கள் எனும் போதும் அது அவர்கள் படித்த துறை சார்ந்ததா? இல்லையா? என்பது கேள்விக்குறி தான்.
டிசிகாப் பள்ளியில் கல்வியமைப்பு
பட்டப்படிப்பைப் பெறுவதற்கான கால அளவு
டிசிகாப் பள்ளி, ஏறக்குறைய ஓராண்டு பயிற்சி (training) மற்றும் 6 மாத வேலைப்பயிற்சி காலத்தையும் (Internship) கொடுக்கிறது. பயிற்சி முடித்த பிறகு, மாணவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். டிசிகாப் பள்ளியில் full stack development தொடர்பான நிரலாக்க மொழிகள் (programming language) கற்றுத்தரப்படுகிறது. முதல் நாளிலிருந்தே கணினி அடிப்படைகளில் தொடங்கி, HTML, CSS மற்றும் JAVASCRIPT க்கான இணையதள முன் முனை (front-end) மற்றும் இதனிடையிலேயே முழுமையாக வடிவமைப்பையும் Design பற்றியும், GitHub இல் எவ்வாறு வேலை செய்வது என்பதைப் பற்றியும் கற்றுத்தரப்படும். முதல் நான்கு மாதங்களில் முன்-முனையில் (front-end) அதிக கவனமும், அதற்குப் பிற்பட்ட காலங்களில் பின்-முனை (back-end) தொடர்பான கணினி மொழி மற்றும் கட்டமைப்புகளில் அதிக கவனமும் செலுத்தப்படுகிறது. கல்லூரியில் நாம் எதைக் கற்கிறோம் என்பது இரண்டாம் ஆண்டு முடித்தப் பிறகு தான் தெரியும். ஆனால், இந்த படிப்பை முடித்த பிறகு, அடுத்து செய்ய வேண்டியது தெளிவாகத் தெரியும். கல்லூரியில், மாணவர்கள் பணம் செலுத்தி ஏதாவது கற்றுக்கொள்வார்கள். ஆனால், டிசிகாப் பள்ளியில், மாணவர்கள் குடும்பத்தை ஆதரித்து, தங்களின் கற்றலைப் பெருக்கி, ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையும் பெறுகிறார்கள். அது மாணவர்களின் அன்றாட தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து, அவர்களை முன்னேறத் தூண்டுகிறது. மாணவர்களுக்கு இணைய வசதியுடன் இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டு, அவர்கள் கற்றுக் கொண்டதை பயிற்சி செய்து அவர்களுக்குத் தெளிவான விளக்கம் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியானது அவர்களின் கல்வி வெறும் புத்தக அறிவை கற்றதோடு மட்டுமில்லாமல் அதனைப் பயன்படுத்திப் பார்க்கவும் வழி செய்கிறது.
டிசிகாப் பள்ளியில் மென் திறன்கள் ( Soft Skills)
டிசிகாப் பள்ளியில் சக ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றவர்களுடன் எப்படிச் சரியாகப் பழக வேண்டும், நேரத்தை எப்படி நிர்வகிப்பது, சிந்தனையை எப்படி நேர்மறையாக மேம்படுத்துவது மற்றும் மோசமான காலங்களில் அந்த சூழ்நிலையை எவ்வாறு மாற்றியமைப்பது போன்ற அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மாணவர்களிடம் உள்ள தலைமைப் பண்புகளில் கவனம் செலுத்தி, அவர்களுக்குத் தேவையான தலைமைப் பண்புகள் குறித்துப் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். மாணவர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவித்து அவர்களை சிறந்த தலைவர்களில் ஒருவராக ஆக்க வழி அமைத்துத்தரப்படுகிறது. இத்தோடு நிற்காமல், சமூகத்திற்குள் அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், எப்படி அறிவாளியாக நடந்துகொள்வது என்பதற்கு ஏற்றவாறும் கற்பிக்கப்படுகிறது. இங்கு கற்றவர்களும் ஆர்வமுள்ளவர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இங்கு மாணவர்கள் தங்கள் அறிவை தாங்களாகவே மேம்படுத்த முடியும். மேலும் இங்கு மாணவர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். வாசிப்பு மாணவனின் வாழ்க்கையை முன்னோக்கி உந்தித் தள்ளும் ஒரு சக்தி. வாசகர்கள் தலைவர்களாக இருப்பார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கும் பழக்கம் இங்கு ஊக்குவிக்கப்படுகிறது. வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தத் தினந்தோறும் வாசித்ததைக் குறித்து கூட்டம் நடத்தி, புத்தகங்களைப் பற்றி விவாதம் செய்யப்படுகிறது.
டிசிகாப் பள்ளியில் செய்முறைப் பாடங்கள்
டிசிகாப் பள்ளியில், ஒவ்வொரு அமர்வையும் கற்பித்த பிறகு, கற்றுக்கொண்டதை நடைமுறையில் மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா என்பதில் முழுமையாகக் கவனம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் முழு இணைய இணைப்புடன் கூடிய தனித்தனியான மடிக்கணினி அளித்து எதையும் கற்றுக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியைச் (project) செய்வதற்கு முழு சுதந்திரம் வழங்கி, ஆராய்ச்சியை முடிக்க ஊக்குவித்து ஆதரவளிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வழிகாட்டிகள் மூலம் தங்கள் அறிவைப் பெறுகிறார்கள். மேலும், மாணவர்கள் தொழில்துறையில் வேலை செய்யும் பயிற்சியாளர்களைத் தங்கள் பயிற்சியாளர்களாகக் கொண்டுள்ளதால், அவர்கள் தங்கள் முழு திறமையுடன் நடைமுறையில் தேவைப்படும் அறிவைப் பெறுகின்றனர். மாணவர்கள் ஆரம்ப நிலையில், சிறிய அளவிலான திட்டங்களில் (project) வேலை செய்து அதில் இருந்து திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டு இறுதி நிலையில் பெரிய அளவிலான திட்டங்களைச் செய்து முடிக்கின்றனர். இந்த கற்றல் செயல்பாடானது அவர்களுக்கு நிஜ உலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஊக்குவிப்பதாக அமைகிறது.
வேலை வாய்ப்புகளுக்கான வழிகாட்டுதல்
டிசிகாப் பள்ளியில், ஒரு வருட பயிற்சி காலத்தை முடித்த பிறகு, மாணவர்களுக்கு ஆறு மாத பயிற்சிக் காலம் (Internship) உள்ளது. அந்த 18 மாதங்களை முடித்த பிறகு, தேவைகளின் அடிப்படையில் டிசிகாப்பில் வேலை பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் அனைத்தும் வேலை வாய்ப்பை மையப்படுத்தியே அமைகிறது. வேலை கிடைப்பது மட்டும் இன்றி அந்த வேலையின் அடுத்த கட்டம் செல்லும் அனைத்து விதமான திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தான் தேர்ந்தெடுக்கப் போகும் தொழில் பாதை பற்றிய தெளிவு அதிகமாக இருக்கிறது. கல்லூரியில் பழைய தொழில்நுட்பங்களே கற்பிக்கப்படுகிறது. ஆனால் டிசிகாப் பள்ளியில் காலமாற்றத்திற்கேற்ப புதுமையான தொழில்நுட்பங்கள் (trending technologies) கற்றுத் தரப்படுகின்றன.
ஏன் டிசிகாப் பள்ளியில் சேர வேண்டும்?
12ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடர விருப்பம் இருந்தும், கல்லூரியில் படிப்பைத் தொடரப் போதிய நிதி உதவி இல்லாதவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய ஆர்வமாக இருந்தும் வேலைக் கிடைக்காதவர்களுக்கும் தங்களின் இலட்சியத்தை அடைய உதவும் ஒரு வழிகாட்டி கருவியாக டிசிகாப் செயல்படுகிறது. தங்களின் குடும்பத்தை நிதி ரீதியாக ஆதரித்து, மாணவர்களின் அன்றாட தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வது மாணவர்களைத் தொடர்ந்து கற்க தூண்டுகிறது. தங்கள் பணியிடத்தில் நிகழ்நேரத்தில் எவ்வாறு வேலை செய்வது என்பதும், ஒரு குழுவுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பதும், அவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதும் இங்கு கற்பிக்கப்படுகிறது. பணிக்குத் தேவையான மென் திறன்களையும் மாணவர்கள் இங்கு கற்றுக் கொள்கிறார்கள். தொடர்ச்சியாக படிப்பது ஊக்குவிக்கப்படுவதால் சமூகத்தில் அவர்கள் தொடர்ந்து தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்கிறார்கள். அது அவர்களை பணியிடத்தில் பிரகாசிக்கவும், அவர்களின் அறிவை அதிகரிக்கவும் உதவும். மேலும் அவர்களின் தனித்தன்மையை இச்செயல்பாடு மேன்மைப்படுத்துகிறது. பெண்களை உறுதியான வேலை வாய்ப்புடன், அவர்களின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும், அவர்களின் கற்றலை ஊக்குவிக்கவும், டிசிகாப் பள்ளி ஒரு வாய்ப்பாகும்.
மொத்தத்தில், பல லட்சங்கள் கொடுத்து கல்லூரி படிப்பை படிக்க இயலா நிலையில், தொழில் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அதைக் கொண்டு சிறந்த நிறுவனங்களில் பணிபுரியவும் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே டிசிகாப் பள்ளி.