2025 பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
டிசிகாப் இல் மென்பொருள் பொறியாளராகுங்கள்
இலவசப் பயிற்சி + உதவித்தொகை + வேலைவாய்ப்பு
டிசிகாப் பள்ளி என்பது டிசிகாப் சமூகத்தின் ஒரு முன்முயற்சியாகும். இதன் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு/பாலிடெக்னிக் அல்லது டிப்ளமோ பட்டம் முடித்த மாணவர்களுக்கு மேற்கொண்டு அவர்களின் வாழ்கையை சிறப்பு அமைத்துக் கொள்வதற்கு தொழில் துறைக்கு ஏற்ற திறன் வளர்ச்சி பயிற்சியியை வழங்குகிறது. பயிற்சி வகுப்புகள் டிசிகாப் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றது.
விலையுயர்ந்த உயற்க்கல்வியை பயில முடியாமல் மாற்று படிப்புகளையோ, குடும்ப சூழல் காரணமாக சாதாரண வேலைகளையோ தேர்ந்தெடுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அல்லது குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை சார்ந்த இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தேவையான திறன்களைக் கற்பித்து அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது, டிசிகாப் பள்ளி. டிசிகாப் பள்ளியின் நோக்கம் மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி அவர்கள் டிசிகாப் சமூகத்திலேயே பணிபுரிவதற்கான வாய்ப்பை மேம்படுத்திக் கொடுப்பதாகும். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தொழில் மற்றும் பொருளாதார வகையில் நிலை பெற டிசிகாப் பள்ளி சிறந்த அடித்தளமாக இருக்கும். மேலும் மாணவர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்ப சூழலயும் இந்த வாய்ப்பு மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள்
பயிற்சியின் கால அளவு
பயிற்சியின் கால அளவு
12 மாதம் பயிற்சி + 6 மாதம் பணிக்கல்வி
உதவித்தொகை
உதவித்தொகை
பயிற்சியின் முழு காலத்திற்கும் உங்கள் கற்றலுக்கு உதவ மாதத்திற்கு ரூ.10,000
How DCKAP Palli works
Embark on Your Learning Journey! Become a Valued Member of Our Lifelong Learning Community
Explore Our Course Roadmapதகுதி வரம்புகள்
- Students who have completed their 12th/Diploma/Polytechnic in 2025 can apply for this program
- தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
- கணிதம் / வணிக கணிதம் பாடங்களைப் படித்த மாணவர்கள், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
- சமுதாயத்தின் அடி நிலை வகுப்பைச் சார்ந்த அல்லது பொருளாதரத்தில் நலிவடைந்த குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- மென்பொருள் நிரலாக்க திறன்களில் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செயல்முறை
பதிவு செய்தல்
விண்ணப்பத் தணிக்கையிடல்
எழுத்துத் தேர்வு
நேர்முகத்தேர்வு
பணி அமர்வு
சிறப்பம்சங்கள்
- தொழில் வல்லுநர்களிடமிருந்து மென்பொருள் மேம்பாடு மற்றும் தகவல் தொடர்பு திறன் பற்றிய பயிற்சி
- டிசிகாப்பின் தொழில்நுட்ப பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்
- இணைய வசதியுள்ள மடிக்கணினிகள் / மேசைக்கணினிகள் வழங்கப்படும்
- உணவு (காலை மற்றும் மதிய உணவு) வழங்கப்படும்
- பத்திரங்கள் / ஒப்பந்தங்கள் இல்லை, பாடக்கட்டணம் அல்லது விண்ணப்பக் கட்டணம் இல்லை
THE MOMENT OF PRIDE AND ACCOMPLISHMENT
The inaugural group of students from the Palli Cohort, who participated in the training program from 2022 to 2024, have completed their training and internship with flying colors. They have successfully proven their skills and knowledge, and are now officially a part of the DCKAP community.
எங்களைப் பற்றி உங்களுக்கு ஏற்படக்கூடிய கேள்விகள்?
பயிற்சி எங்கே நடைபெறுகின்றது?
இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணா நகரில் உள்ள டிசிகாப் அலுவலகத்தில் நடைபெறும். பயிற்சியாளர்கள் வகுப்புகளை நேரடி முறையில் நடத்துவார்கள்.
பயிற்சியின் கால அளவு என்ன?
பயிற்சியின் காலம் 18 மாதங்கள் ஆகும். ஆரம்ப 12 மாதங்கள் பயிற்சி மற்றும் 6 மாதங்கள் பணிக்கல்வி.
நாங்கள் என்ன திறமைகளை கற்பிக்கிறோம்?
எங்கள் திட்டத்தை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் வைத்திருப்பதில், நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எனவே, சில கல்வி ஆண்டுகள் மாணவர்களுக்கு மென்பொருள் நிரலாக்கத் திறன்களைப் பயிற்றுவிப்பதே எங்கள் முக்கிய நோக்கம்.
டிசிகாப் பள்ளிக்குச் செல்வதற்கு ஏதேனும் ஒப்பந்தங்கள்/பத்திரங்கள் உள்ளதா?
ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாணவர்களுடன் நீண்ட கால உறவை உருவாக்குவோம் என்று நம்புகிறோம். ஒப்பந்தங்கள்/பத்திரங்கள் எதுவும் இல்லை.
தொழில் வல்லுநர்களிடம் இருந்து மென்பொருள் மற்றும் தகவல் தொடர்புத் திறன் குறித்த நடைமுறை பயிற்சி
உலகின் முன்னணி டிஜிட்டல் வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றான டிசிகாப்பில் கற்று வேலை செய்யுங்கள்.