மாற்றம் ஒன்றே மாறாதது! எனது பெயர் பரசுராமன். எனது தேடுதல் டிசிகாப் பள்ளியில் தொடங்கியது – நிச்சயமற்ற தன்மை மற்றும் நிறைவேறாத கனவுகள் நிறைந்த ஒரு அத்தியாயம் என் வாழ்க்கை. என் வாழ்க்கையில் நிறைய தடைகள் இருந்தன. வேலையில் அதிருப்தி, தெளிவான வழிகாட்டுதல் இல்லை, வாழ்க்கையின் முற்றுப்புள்ளியை நான் அடைந்தேன். ஆனால் நான் என் நம்பிக்கையை இழக்கவில்லை. “வெற்றி என்பது இறுதியானது அல்ல, தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவில்லை” என்பதை நான் உணர்ந்துகொண்டேன். தளராத அர்ப்பணிப்பு மற்றும் தளராத மனப்பான்மையின் மூலம், நாம் எந்தப் போராட்டங்களையும் எதிர்கொண்டு அதில் வெற்றிபெற முடியும் என்பதைக் உணர்ந்தேன். நான் எப்படி டிசிகாப் பள்ளியில் சேர்ந்தேன். அந்த ஒற்றை முடிவு எப்படி என் வாழ்க்கைப் பாதையை மாற்றியது என்ற எனது கதையைத் தொடங்குகிறேன்.
என் வாழ்வில் நடந்த திருப்புமுனைகள்:
நான் என்னுடைய கல்லூரி நாட்களை முடித்துவிட்டு சில நாட்கள் வீட்டில் இருந்தேன். ஒவ்வொரு அப்பாக்களும் கேக்கும் கேள்வி என்னவென்றால், “எப்பொழுது வேலைக்கு போவாய்” என்று, அந்த கேள்வியை என்னிடம் என் அப்பாவும் கேட்டார். அவர் விருப்பத்திற்காக, எனக்கு பிடிக்காத துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அந்த துறை பிடிக்கவில்லை
என் அப்பாவிடமும் அம்மாவிடமும் கூறிவிட்டு அந்த துறையில் இருந்து நின்றுவிட்டேன். நின்றுவிட்ட பிறகு, எனது நிண்ட நாள் ஆசையான, இணைய பாதுகாப்பு பற்றி படிக்கவேண்டுமென்று என் அண்ணனிடம் கேட்டேன். அவர் அதை மறுத்தார். பிறகு என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். அப்பொழுதுதான் டிசிகாப் பள்ளி பயிற்சியில் நுழைய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆகஸ்ட் மாதம் 18 தேதி அன்று நான் நேர்காணலில் கலந்துகொண்டு, நேர்காணலில் தேர்ச்சிப்பெற்றேன்.
டிசிகாப் பள்ளி எனக்கு கிடைத்த ஒரு வரமாக கருதினேன். ஏனெனில், நான் 12 ஆம் வகுப்பில் கணினி குழுவில் சேர்ந்தேன். அதே துறையில் வேலை கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது டிசிகாப் பள்ளி உடன் இணைந்து என் இனிமையான பயணத்தை தொடங்கியுள்ளேன்.
என் இனிமையான நாட்கள்:
நான் டிசிகாப் பள்ளிக்கு வருவதற்கு முன், ஒரு வலைத்தளம் எவ்வாறு இயங்குகிறது, அதை எவ்வாறு வடிவமைப்பது என்று எதுவும் எனக்கு தெரியாது. பிறகு டிசிகாப் பள்ளியில் இணைந்தவுடன் HTML, CSS, மற்றும் ஜாவாஸ்கிரிப்ட்டை பயன்படுத்தி, ஒரு வலைத்தளத்தை எவ்வாறு வடிவமைப்பது, தரவுத்தள மேலாண்மை (MySQL) போன்றவற்றை கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்டதை பயிற்சிக்கும் போது நிறையை குழப்பங்கள் தோன்றும். அதை எனக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளரிடம் கேட்க்கும்பொழுது, முகம் சுழிக்காமல் அந்த குழப்பத்திற்க்கான தீர்வை அளிப்பார்கள். அந்த தருணத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்ற எண்ணம் என் மனதில் தோன்றும்.
அடுத்ததாக நான் டிசிகாப் பள்ளியில் நுழைந்து பள்ளி ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்தேன். அவர்கள் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி பேசுகிறார்கள், புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கிறார்கள், மற்றும் அவர்கள் கற்றுக்கொண்ட அனைத்தையும் எங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களை பார்க்கும்பொழுது, அவர்களைபோல ஆக வேண்டுமென்று என் மனதில் ஒரு ஆசை ஏற்படும். அதில் இருந்து நானும் புது புது விசயங்களை பற்றி தேடி படிப்பதை என்னுள் வளர்த்துக்கொண்டேன்.
மேலும் டிசிகாப்பின் நிறுவனர் மிகவும் தன்னடக்கமும் மற்றும் அன்பானவரும் கூட. ஒருமுறை அவர் முன்னிலையில் எனக்கு பிடித்த திறந்த செயற்கை நுண்ணறிவு (OPEN AI) தொழில்நுட்பத்தை பற்றி பேசினேன். அந்த தருணங்கள் என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாகும்.
எனக்கு இருக்கும் சந்தேகங்களை மென் திறன் பயிற்சியாளர் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். அது மட்டுமல்லாமல் அவர்களுடன் சேர்ந்து, ‘சிங்’ என்ற ஆங்கிலேய கார்ட்டூன் திரைப்படத்தை பார்த்த தருணங்கள் இனிமையாக இருந்தது.
நான் பள்ளியில் இருந்த காலத்தில் பல புதிய பழக்கங்களை கற்றுக்கொண்டேன். புத்தகங்கள் வாசிப்பது, வானொலி கேட்பது போன்றவற்றை வளர்த்துக்கொண்டேன், அதுமட்டுமல்லாமல் நிறைய புது புது நபர்களை சந்தித்து பேசினேன். டிசிகாப் பள்ளியில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்ததில் மிகவும் சந்தோசமடைந்தேன்.
நான் தமிழ் வழி கல்வியில் பயின்றவன். அதனால் ஆங்கிலத்தில் உரையாட சற்று கடினமாக இருந்தது. பயிற்சியாளர் மற்றும் சக மாணவர்களுடன் ஆங்கிலத்தில் பேச தயங்கினேன். மேடை பேச்சு என்றால் எனக்கு மிகவும் பயம், டிசிகாப் பள்ளியில் சேர்வதற்கு முன்னர் நான் மேடையில் பேசியது கிடையாது. அந்த தருணம் எப்பொழுது வரும் என்று எண்ணி நடுங்கி கொண்டிருந்தேன். பள்ளியில் எங்களுக்கு மின்னஞ்சல் எழுதுவது எப்படி, பணியிட பழக்கவழக்கங்கள், ஆங்கிலம் பேசும் பயத்தைப் போக்குதல், போன்ற பல்வேறு மென் திறன்களைக் கற்றுக் கொடுத்தனர். இது எனது பேச்சு பயத்தை போக்க உதவியது. எனது முதல் மென் திறன் மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண்களை பெற்றேன். இதைத் தொடர்ந்து, எனது பலம் மற்றும் பலவீனங்களை மேம்படுத்த எனது பயிற்சியாளர் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கினார். எனது காயங்கள் காரணமாக, என்னால் பல டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் கலந்து கொண்ட சிலவற்றில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
முன் முனை வளர்ச்சியில் எனது படிப்பை முடித்தவுடன், பின் முனை வளர்ச்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இந்தத் துறையில் அறிவு மற்றும் அனுபவமுள்ள எனது வழிகாட்டியால் நான் ஆழமாக ஈர்க்கப்பட்டேன். அவருடைய வழிகாட்டுதல் ஒரு மென்பொருள் உருவாக்குநராக, எனது திறமைகளையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை எனக்குள் தூண்டிவிட்டது.
தரவுத்தள மேலாண்மை(MySQL) அமைப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்வதில் எனது கவனம் மாறியது. அதில் நான் குறிப்பிடத்தக்க முயற்சியை அர்ப்பணித்தேன். இந்த அர்ப்பணிப்பும் வெற்றியும் எனது வழிகாட்டியின் விருப்பமான மாணவன் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.
அவருடைய கற்பித்தல் முறையை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அவர் அளிக்கும் பணிகள் சவாலானவை. சிந்திக்கத் தூண்டுபவை. அவற்றை முடித்தவுடன், அவர் எனது முயற்சிகளை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், விவாதங்களிலும் ஈடுபடுவார். பணி தொடர்பான பல கேள்விகளைக் கேட்பார். இது எனது பின்முனை வளர்ச்சிப் பயணத்தில் மேலும் சிறந்து விளங்க என்னைத் தூண்டியது.
வேலை பயிற்சி:
டிசிகாப் பள்ளியில் 1 வருட பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு, டிசிகாப்பில் எனது வேலை பயிற்சியை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய வேலை பயிற்சி ரியாக்ட்.ஜெ.எஸ்-ஐ கற்றுக்கொள்வதிலிருந்து தொடங்கியது. ஆரம்பக் கட்டத்தில் அதனைப் புரிந்து கொள்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. இந்த சமயங்களில் எங்கள் பள்ளி பயிற்சியாளர் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். எளிதாகப் படிப்பதற்கான குறிப்புக்கள், எங்கள் அறிவை சோதித்தால், ஊக்கப்படுத்தல் என்று பல்வேறு உதவிகளைப் புரிந்தார்.
பின்தள குழுவினருடன் இணைந்து எங்களது முதல் திட்டத்தைத் தொடங்கினோம். அது ஒரு திரைப்பட மேலாண்மை திட்டம். எங்களுடைய முன்முனை திறனை அவர்களின் பின்முனை அனுபவத்துடன் இணைத்து, இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினோம். இந்த திட்டத்தின் போது நாங்கள் பல பிழைகளைச் சந்தித்தோம். இந்த நேரத்தில், பின்தள குழுவின் ஆதரவு இந்த சிக்கல்களைத் தீர்க்க எங்களுக்கு உதவியது. அவர்களின் நிபுணத்துவம், நிஜ உலக பயன்பாடுகளை உருவாக்குவதில் பல்வேறு நுண்ணறிவுகளை எங்களுக்கு வழங்கியது. இந்த வெற்றிகரமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து, நான் டிசிகாப் பள்ளிக்கான மற்ற திட்டங்களில் பங்கேற்றேன். தற்போது நாங்கள் பள்ளி பயன்பாட்டின் முன் முனையை மேம்படுத்துவதில் பணியாற்றி வருகிறோம்.
எனது திறமைகளை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை வழங்கியதற்காக, டிசிகாப் பள்ளியில் இருந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிசிகாப்பிலிருந்து மேலும் கற்றல் அனுபவத்தைப் பெறுவேன் என்று நம்புகிறேன் மற்றும் எனக்கு வழங்கப்படும் சவால்களைத் எதிர்கொள்ளக் காத்திருக்கிறேன்.
பள்ளியில் இருந்த காலம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. டிசிகாப் பள்ளியின் கலாச்சாரத்துடன் இணைந்து பயணித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் நான் இங்கு இருந்த ஒவ்வொரு நாளும் என் பள்ளி பருவத்தை நியாபகப்படுத்தின. மேலும் எனக்கு பயிற்சியளித்த நல்லுள்ளங்களுக்கும் மற்றும் பயிற்சியளிக்க போகின்ற நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி!