Skip to main content

DCKAP நிறுவனம்:

DCKAP உலகின் முதன்மையான டிஜிட்டல் வர்த்தகத் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்று. விநியோகஸ்தர்களுக்கு வர்த்தகத்தை எளிதாக்குவதே எங்கள் நிறுவனத்தின் லட்சியம். கொரோனா பரவல் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருந்த நேரத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் (work from home) என்ற  வீட்டிலிருந்தபடியே வேலைச் செய்வது என முடிவு செய்து செயல்பட தொடங்கினோம். தற்போது, இந்தியா மற்றும் அமெரிக்கா  முழுவதுமிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் எங்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். DCKAP-யை நாங்கள் நிறுவனமாகக் கருதுவதில்லைச் சமூகமாகவே கருதுகிறோம். 

சமூக நலன் சார்ந்த நடவடிக்கை:

எங்களின் சமூகம் அதனைச் சுற்றி உள்ள சமூகத்திற்கு உதவும் பொருட்டு 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் பட்டப்படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்க தொடங்கினோம். படித்து முடித்தவுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதென்பது எட்டாக்கனியாக இருந்ததை நாங்கள் அறிந்தோம். மேலும், மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கான தேவையை பற்றி அறிய அது வழிவகுத்தது.. தற்போது அந்தத் திட்டம் தான் எங்களுக்கு DCKAP பள்ளி எனும் வாய்ப்பை உருவாக்க அடிக்கல் நாட்டியது.

DCKAP பள்ளி – முன்னோட்டம்:

DCKAP பள்ளி, விலையுயர்ந்த கல்லூரிக் கல்வியைப் பெற முடியாமல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உலகில் நுழைய முடியாமல் தனது கனவுகளைத் தனக்குள்ளே புதைத்துவிட்டு மாற்றுக்கல்வியைத் தேடும் தாழ்த்தப்பட்ட அல்லது குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்களுக்குத் தன் திறமையை வெளிபடுத்துவதற்கான  மேடையை  அமைத்துக்கொடுக்கிறது.

யார் விண்ணப்பிக்கலாம்:

12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளோமா பயின்ற திறமைமிகு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, தேவையான தொழில் திறன்களைப் பயிற்றுவித்து, அவர்களைத் தொழில்வல்லுநர்களாக மாற்றுவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது DCKAP பள்ளி. கல்லூரி படிப்பைக் காட்டிலும் சிறந்த பாடத்திட்டத்தை அவர்களுக்கு வழங்கி மற்றும் அவர்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு  உதவி  தொகையையும் வழங்கி வருகிறது. 

DCKAP பள்ளி – முதலாம் ஆண்டு:

DCKAP பள்ளி, சென்னை அண்ணா நகரில் உள்ள எங்களது அலுவலகத்தில் 2022 செப்டம்பர்-12 அன்று துவக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கி வெற்றிகரமாக மூன்று மாதத்தினைக் கடந்துள்ளது. DCKAP பள்ளியில் தற்போது,  மூன்று 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மற்றும் 20 டிப்ளமோ படித்த மாணவர்கள் என மொத்தம் 23 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 

பயிற்சி வகுப்புகள்:

DCKAP பள்ளியில், இணையதள வடிவமைப்பிற்குத் தேவையான அனைத்தையும், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் உதவியுடன் மாணவர்களுக்குத் திறம்பட கற்பிக்கப்பட்டு வருகின்றது. DCKAP சமூகத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களின் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் DCKAP பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். இணையதள வடிவமைப்புக்கு (Full Stack Web Development) தேவையான வகுப்புகள் மட்டுமல்லாமல் மாணவர்களின் மென் திறன்களை (பேச்சு திறன், நடத்தை, ஒழுக்கம், நேர மேலாண்மை)  மேம்படுத்தவும் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. DCKAP சமூகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் வெளியில் இருந்தும் திறன் படைத்த மென்பொருள் பயிற்சியாளர்கள் வகுப்புகளை நடத்தி கொண்டு இருக்கின்றனர்.

DCKAP பள்ளி மாணவர்களின் எதிர்காலம்: 

DCKAP பள்ளியில், வெற்றிகரமாக ஒரு வருட கற்றல் பயிற்சி முடித்து மற்றும் ஆறு மாத இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு DCKAP நிறுவனத்தில் பணி புரிவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. 

அடுத்த இலக்கு:

இந்த முறை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த முறை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  திறமை மிகுந்த இளைஞர்களை கண்டறிந்து, அவர்களுடைய திறன் மேம்பாட்டிற்குத்    தேவையான பயிற்சிகளை அளித்து அவர்களை ஊக்கபடுத்தி DCKAP சமூகத்தில் இணைவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதையே எங்கள் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர வேண்டியதன் அவசியத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும், DCKAP பள்ளி, மாணவர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அவர்களுடைய  குடும்பத்தையும் மேம்படுத்தும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.  

DCKAP பள்ளி பற்றிய தகவலுக்கு palli.dckap.com என்ற இணையதளத்தை அணுகவும்.

Sunil Mithran

Author Sunil Mithran

Sunil Mithran is a passionate teacher who turned his career from teaching to NGO and into CSR now. He works for DCKAP as a community specialist managing the DCKAP Palli project end to end.

More posts by Sunil Mithran

Join the discussion 3 Comments

  • Prabhakaran says:

    இது நிறுவனத்தின் அற்புதமான நோக்கம். மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • I missed this post! It is exciting to know that the company you work for has this and the next generation in mind. That they are providing a pathway to a better understanding of tech and where it will evolve in the work field moving forward. Congratulations to everyone who decided to be part of this group. Let this be a stepping stone into your journey of deeper knowledge and a better understanding of self. It will challenge you and what you think. If you see someone in need, help them because at one point you will need the help. Build a comradery of like-minded genius and know that DCKAP is backing you up in this journey. My Best continued best to you and yours.

    P.S. I hope the translations came over correctly.

    A fellow digital friend,

    Aaron Pallares
    ————————————————————————————————————————————————————————————————————————
    இந்த இடுகையை நான் தவறவிட்டேன்! நீங்கள் பணிபுரியும் நிறுவனம் இதையும் அடுத்த தலைமுறையையும் மனதில் வைத்திருக்கிறது என்பதை அறிவது உற்சாகமாக இருக்கிறது. அவர்கள் தொழில்நுட்பத்தைப் பற்றிய சிறந்த புரிதலுக்கான பாதையை வழங்குகிறார்கள் மற்றும் முன்னோக்கி நகரும் பணித் துறையில் அது எங்கு உருவாகும். இந்த குழுவில் அங்கம் வகிக்க முடிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்கள் ஆழ்ந்த அறிவு மற்றும் சுய புரிதலுக்கான உங்கள் பயணத்தில் ஒரு படியாக இருக்கட்டும். இது உங்களுக்கும் நீங்கள் நினைப்பதற்கும் சவால் விடும். தேவைப்படும் ஒருவரை நீங்கள் கண்டால், அவர்களுக்கு உதவுங்கள், ஏனெனில் ஒரு கட்டத்தில் உங்களுக்கு உதவி தேவைப்படும். ஒத்த எண்ணம் கொண்ட மேதைகளின் தோழமையை உருவாக்கி, இந்தப் பயணத்தில் DCKAP உங்களுக்கு ஆதரவளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்களுக்கும் எனது பெஸ்ட் தொடர்ந்தது.

    பி.எஸ். மொழிபெயர்ப்புகள் சரியாக வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    ஒரு சக டிஜிட்டல் நண்பர்,

    ஆரோன் பல்லரேஸ்

Leave a Reply