Skip to main content

என்னைப் பற்றி சில வரிகள்: 

எனது பெயர் சந்தியா ராஜேந்திரன். திருவள்ளூர் மாவட்டம். நான் எனது மின்னணு மற்றும் தொடர்பு டிப்ளமோ படிப்பை மத்தியப் பாலிடெக்னிக் கல்லூரியில் நிறைவு செய்திருக்கிறேன். இப்போது டிசிகாப் பள்ளியில் மென்பொருள் பொறியாளராகப் பயிற்சியில் சேர்ந்து படித்து வருகிறேன். நான் எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

கோடிங் மீது எனக்கு இருந்த பயம் :

நான் என்னுடைய பத்தாம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்ததால் எனது பள்ளியில் எனக்குப் பிடித்த வகுப்பில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கணினி அறிவியல் மற்றும் கணிதம் எடுத்திருந்தேன். கணினி பற்றி ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறிது ஆர்வம் இருந்தது. பிறகு நான் அந்த பாடத்தில் கடைசி இரண்டு பாடப்பகுதி வரும் வரை நன்றாக மதிப்பெண் எடுத்துக் கொண்டிருந்தேன். கடைசி இரண்டு பகுதி கோடிங் பற்றி வந்தது. எனக்கு அது ஓரளவுக்குப் புரிந்தாலும் அதை நான் பயிற்சி செய்து பார்க்காததால் எனக்கு அது சற்று கடினமாக இருந்தது. பிறகு செய்முறைத் தேர்வில் எனது ஆசிரியர் எங்களுக்கு முக்கியமான கோடிங் வினாக்கள் கூறியதால் அதை மட்டும் படித்து தேர்வை எழுதினேன். ஆதலால் எனக்கு அதைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இல்லாமல் போனது. மேல்நிலை படிப்பை முடித்ததும் நான் 2 முதல் 3 கல்லூரிகளுக்கும் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்திருந்தேன். எனக்கு ஒரு கல்லூரியில் B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் கிடைத்தது. ஆனால் எனக்கு கோடிங் மீது இருந்த பயத்தால் நான் பாலிடெக்னிக் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். பாலிடெக்னிக் கல்லூரியில் நன்றாக படித்துக் கொண்டிருந்தேன். முதலாம் ஆண்டு கல்லூரி சென்றது. அடுத்த ஒரு ஆண்டு கொரோனவினால் வீட்டில் ஆன்லைனிலேயே சென்றது. இரண்டாம் ஆண்டு எனக்கு மீண்டும் சி ப்ரோக்ராம்மிங் வந்தது. ஆனால் அதுவும் ஆன்லைனில் சென்றதால் என்னால் அந்த அளவுக்குக் கற்றுக்கொள்ள முடியவில்லை. 

கோடிங் மீது ஆர்வம் ஏற்பட்டது :

மூன்றாம் ஆண்டு முதல் பருவத்தில் பத்து நாட்கள் ஆன்லைனில் சென்றது. அப்போது என்னையும் அறியாமல் கோடிங் மேல் எனக்கு ஆர்வம் வந்தது நான் கொஞ்சம் கொஞ்சமாக அதைப் பற்றி தேடி C++ படிக்க ஆரம்பித்த சிறிது நாட்களில் மீண்டும் கல்லூரி ஆரம்பித்தது. தினமும் எனக்குப் பாதி நேரம் கல்லூரிக்குப் பயணம் செய்யவே சரியாக இருந்தது. வீட்டிற்கு வந்து படிக்கவும் கல்லூரியில் கொடுக்கும் வேலைகளையும் முடிக்கவும் நேரம் சரியாக இருந்தது. ஆனால் எனக்கு நேரம் கிடைக்கும் போது நான் கோடிங் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்து பார்த்துக் கொண்டிருப்பேன். அப்படித்தான் எனக்கு full stack development பற்றித் தெரியவந்தது நான் அதைக் கற்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். ஆனால் எதிலிருந்து ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

டிசிகாப் பற்றித் தெரிய வந்தது:

அதற்கு நடுவில் எனது கல்லூரியில் வேலை வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ஆதலால் நான் அதற்குப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். எங்கள் கல்லூரியில் ஏதேனும் ஒரு பணியில் யாரேனும் தேர்வாகி விட்டால் அத்துடன் அவர் வேறு எந்த நேர்காணலுக்கும் முயற்சி செய்யக் கூடாது. மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதனால். நிறைய நிறுவனத்திற்கு விண்ணப்பித்தேன் அனைத்திலும் தேர்வும் ஆகினேன். ஆனால் அவர்கள் கடைசி செமஸ்டர் முடிந்தவுடன் முடிவு சொல்கிறோம் என்றார்கள் ஆதலால் நாங்கள் நிறைய நிறுவனங்களுக்கு முயற்சி செய்து கொண்டே இருந்தோம். அப்போது ஒரு பெரிய நிறுவனத்தில் தேர்வும் ஆகினேன் அவர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆதலால் என்னால் வேறு எந்த நிறுவனத்திலும் முயற்சி செய்ய முடியவில்லை. அதன் பின்னர் தான் டிசிகாப் வேலை வாய்ப்பிற்கு வந்தது. அப்பொழுது எனது கல்லூரியிலிருந்தும் சிலர் தேர்வாகினர் . அப்பொழுது என்னால் அந்த நேர்காணலில் பங்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது. பிறகு தேர்வுகள் முடிந்தது 93% மதிப்பெண் எடுத்திருந்தேன்.

டிசிகாப் பள்ளியில் வாய்ப்பு:

நான் தேர்வான நிறுவனம் திறக்க சிறிது காலம் இடைவெளி இருந்தது. அப்பொழுது எனது தந்தை வீட்டிலிருந்து பணிபுரியும் வேலைக்கு முயற்சிக்கச் சொன்னார் நானும் எனது படிப்புக்குச் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்தேன் மற்றும் எனக்கு கோடிங் சம்பந்தப்பட்ட வேலையில் பணிபுரியும் ஆசை இருந்தது. அதனால் நான் அதற்கும் விண்ணப்பித்தேன் ஆனால் அனைவரும் ஒரு வருட வேலை அனுபவம் கட்டாயம் வேண்டும் என்றனர். ஆதலால் சற்று கடினமாக இருந்தது. அதையும் மீறி எனக்கு கோடிங் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு கிடைத்தால், அவை பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தது ஆதலால் கடினமாக இருந்தது. திடீரென எனக்கு டிசிகாப் பற்றி ஞாபகம் வந்தது அந்த வேலைவாய்ப்பு தளத்தில் ஏதாவது வாய்ப்பு உள்ளதா என்று தேடினேன்.. ஒரு சில வேலை இருந்தது 1வருட வேலை அனுபவத்துடன் ஆனால் நான் அதற்கு விண்ணப்பித்து வைத்தேன் ஒருவேளை கிடைக்கும் என்ற ஒரு சின்ன ஆசையில். பிறகு ஒரு நாள் எனது வேலை வாய்ப்பு குழுவிலிருந்து டிசிகாப்-ல் மென்பொருள் பொறியாளராகும் வாய்ப்பு உள்ளதாகச் சொன்னார்கள். டிசிகாப் பள்ளி எனும் திட்டம் மூலமாக மென்பொருள் பயிற்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. நானும் உடனே விண்ணப்பித்தேன். 

டிசிகாப் பள்ளியில் தேர்வாகிய தருணம் :

இதற்கு இடையில் நான் ஏற்கனவே தேர்வாகியிருந்த எனது நிறுவனத்திலிருந்து இன்னும் சில தினங்களில் உங்களை அழைப்போம் என்றனர் எனக்குச் சிறிது பயமாக இருந்தது நேர்காணலில் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல் சென்று விடுமோ என்று. ஆனால் நேரம் தாழ்த்திக் கொண்டு சென்றனர். அதற்குள் எனக்கு டிசிகாப் பள்ளியில் நேர்காணல் வந்தது எல்லா தேர்வையும் என்னால் முடிந்தவரை நன்றாகச் செய்திருந்தேன். முடிவு அன்று மாலை வெளியிட்டனர் அதுவரை மிகவும் பயமாக இருந்தது கிடைத்த வாய்ப்பை மட்டும் விடக்கூடாது என்று நான் என் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன் எப்படியோ நான் அன்று தேர்வாகி விட்டேன் அந்த மகிழ்ச்சியை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் தேடிய ஒரு நிறுவனத்தில் எனக்குப் பிடித்ததை கற்க ஆவலாக இருந்தேன்.  

டிசிகாப் பள்ளியில் எனது கற்றல் அனுபவம் : 

முதல் நாள் பயிற்சியில் சேர்ந்த போது எதையோ சாதித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. எப்படியாவது நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை இன்னும் உற்சாகப்படுத்தியது. என்னை அந்த நிறுவனத்தில் ஒருவர் போல மதித்தனர். பெண்களுக்கு இங்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. அது எனக்குப் பிடித்திருந்தது. முதல் நாள் அனைவரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். என்னுடன் சேர்த்து 23 மாணவர்கள் இந்த பயிற்சியில் இணைந்தோம். பிறகு வகுப்புகள் தொடங்க ஆரம்பித்தன. முதலில் அடிப்படை கணினி பற்றிச் சொல்லிக் கொடுத்தார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு HTML பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர் மிகவும் ஆர்வமாகக் கற்றுக்கொண்டேன். இதற்கு இடையில் எங்களுக்கு டெர்மினல் கமெண்ட்ஸ் பயன்படுத்த சொல்லிக் கொடுத்தனர். நாங்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தோம் கொஞ்சம் கொஞ்சமாக வடிவமைப்பு (டிசைன்) இல் நான் UI/UX டிசைனிங் பற்றி நிறையக் கற்றுக்கொண்டேன் மற்றும் ஒரு வலைத்தளத்தில் வடிவமைப்பாளர் வடிவமைப்பு செய்த பிறகு தான் அது முன் முனை டெவலப்பரிடம் செல்கிறது என்பதைப் பற்றித் தெரிந்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஃபிக்மாவில் நாங்கள் நிறைய பணி செயல்முறை, வடிவமைப்பு முறைகள் பற்றி எல்லாம் விரிவாகத் தெரிந்து கொண்டோம். அதில் வேலை செய்யும் போது ஆர்வமாக இருந்தது. சோதனை செய்தல் (டெஸ்டிங்) பற்றியும் நான் தெரிந்து கொண்டேன் நாங்கள் உருவாக்கிய வடிவமைப்பில் உள்ள பிழைகள் மற்றும் தவறுகளை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்று நேரலையில் செய்து காட்டினர் அது எங்களுக்குச் சோதனை செய்தல் பற்றி ஒரு புரிதல் தந்தது. எங்களது நிறுவனத்தில் கூகுள் தொகுப்பு (கூகிள் சுய்ட்) அதிகம் பயன்படுத்துவதால் அதைப் பற்றியும் எங்களுக்கு நிறையச் சொல்லிக் கொடுத்தார்கள் மற்றும் ஒரு மின்னஞ்சலுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் மதிப்பளிக்க வேண்டும் என்றெல்லாம் கற்றுக் கொண்டேன் மற்றும் நிறுவனத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டேன் அதை நானும் பின்பற்றுகிறேன்.

கோடிங் பற்றிய பயம் குறைய ஆரம்பித்தது 

HTMLலில் நாங்கள் தெளிவாக கற்றதும் அடுத்தது CSS ஆரம்பித்தனர் அதையும் கற்றுக் கொண்டோம் இதில் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் ஒன்றில் முழுமையாக கற்கும் வரை அதில் எவ்வளவு சந்தேகம் இருந்தாலும் எங்களுக்குப் புரிய வைக்கின்றனர் மற்றும் அனைத்து பயிற்சியாளர்களும் என்னை மிகவும் உத்வேகம் ஊட்டினர். அது எனக்கு கோடிங் மீது இருந்த பயத்தைப் போக்கியது மற்றும் தகவல் தொடர்பு திறன் (கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்) பயிற்சியும் கொடுத்து என்னை மெருகேற்றினர். எனக்கு ஆங்கிலம் பேசுவது புரிந்தாலும் பேசி பழகவில்லை ஆதலால் என்னை ஒவ்வொருமுறையும் பயிற்சி கொடுத்து ஆங்கிலத்தில் பேசவும் வைத்தனர். நானும் கொஞ்சம் கொஞ்சமாக மேடை பயம் நீங்கி ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். மென் திறன்கள் (சாப்ட் ஸ்கில்ஸ்) அதில் நேர்மறை அணுகுமுறை, தகவலமைப்பு திறன், நேரம் மற்றும் ஆற்றல் மேலாண்மை பற்றி கற்றுக் கொண்டோம். இவை எங்கள் நிஜ வாழ்க்கையிலும் பயன்படுகிறது. ஃப்ரண்ட் எண்ட் தொழில்நுட்பங்கள் மட்டும் அல்லாமல் DBMS SQL போன்ற பேக் எண்ட் தொழில்நுட்பங்களும் கற்றுக் கொண்டிருக்கிறோம். அனைவரும் அதை மிக எளிதில் கற்கும் வகையில் நடத்தினர். எங்களுக்கு அதைப் புரிந்து கொள்ள மிகவும் எளிதாக இருந்தது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு வெளியீட்டிற்கும் எங்களுக்கு பாராட்டு கிடைப்பதால் அதை கற்க நான் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். ஒரு சில நேரம் அதில் அந்த பயிற்றுவிப்பவர் வினாடி வினா போன்றவற்றை எங்களுக்காகத் தயார் செய்து வருவார்கள். அதில் கலந்து கொள்ளும் போது மிகவும் உற்சாகமாக இருக்கும். இப்பொழுது நாங்கள் HTML மற்றும் CSS இல் நன்றாக கற்று பயிற்சி செய்தும் முடிந்துவிட்டதால் எங்களுக்கு JAVASCRIPT எடுக்க ஆரம்பித்தனர். முதலில் சிறிது கடினமாக இருந்தது ஆனால் போகப் போக நாங்கள் அதில் நிறையப் பயிற்சி செய்ததால் , எங்களுக்கு அது சற்று எளிமையாக இருக்கிறது. 

புத்தகம் வாசிக்கும் பழக்கம் :

புத்தக வாசிப்பு டிசிகாப்-ல் முக்கியமான ஒரு பன்பாகக் கருதப்படும். வாசிப்பவர்களே தலைவர்கள் என நம்பிக்கை இங்கு உண்டு.  எங்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர். நாங்கள் சின்னஞ்சிறு பழக்கங்கள் என்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தோம். அந்த புத்தகத்தை முடிப்பதற்குள் நான் என்னிடம் ஒரு சில நல்ல பழக்கங்களை உருவாக்கியுள்ளேன் என்பதை நினைத்து நான் பெருமையடைகிறேன் . புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி மற்றும் எங்கள் கேட்கும் திறனை அதிகரிக்க வளையொலி கேட்கும் பழக்கத்தை உருவாக்கினர். மேலும் எங்களது தலைமை நிர்வாக அதிகாரி மாதம் இரண்டு முறையேனும் எங்களை நேரில் காண வருவார். அது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். அவர் எங்களை நன்றாக ஊக்குவிக்கிறார் 

டிசிகாப் பள்ளியில் பிடித்தது:

எங்களை மாணவர்களைப் போல் பார்க்காமல் சக ஊழியர்களைப் போல மதிக்கிறார்கள். எனக்கு இந்த கலாச்சாரம் மிகவும் பிடித்திருக்கிறது.  எங்கள் படைப்புகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். எங்களுக்கு ஒரு விஷயம் புரியும் வரை அதில் எவ்வளவு சந்தேகங்கள் எங்களுக்கு இருந்தாலும் பயிற்றுவிப்பர் எங்களுக்குச் சலிப்பில்லாமல் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆதலால் எங்களுக்கும் அவர்களிடம் கேள்விகளை கேட்பதில் எந்த பயமும் இருப்பதில்லை.  எங்கள் சுயகற்றல் திறனை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள். நாங்கள் கற்பதற்கு உதவித்தொகை கொடுப்பது மிகவும் உதவியாக இருக்கிறது மற்றும் ஊக்கமளிப்பது போல் இருக்கிறது அதற்கு மிக்க நன்றி. இப்படி ஒரு வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. நான் டிசிகாப் பள்ளியில் நன்றாக கற்று டிசிகாப்-ல் பணிபுரிய ஆசைப் படுகிறேன். அந்த நாளை எதிர்நோக்கி இருக்கிறேன். என்னைப் போல நிறைய மாணவ மாணவிகள் இந்த திட்டத்தால் பயன் பெற வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.

Sandhya Rajendran

Author Sandhya Rajendran

Sandhya joined DCKAP as a trainee at DCKAP Palli. She completed her Diploma in Electronics and Communication Engineering. After trying hard to enter into IT industry she got the opportunity here at DCKAP Palli. She is a continuous learner and someone who turns challenges into success.

More posts by Sandhya Rajendran

Join the discussion 2 Comments

  • உங்கள் பதிவை படித்து நெகிழ்த்தேன். உங்கள் முயற்சி தொடரட்டும். உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.

  • Sandhya Rajendran,

    Thank you for taking the time to share your experience. I enjoyed reading about your life and just think, this is only the beginning. There is a lot more to come and a lot more to create in the digital world. Make no mistake women in tech are a force to be reckoned with meaning. Your own drive demonstrates the class of person you are. Not anyone would be in a sea where men “dominate” the field. You were bold enough to participate and to top it off, to be the only woman in the group, which shows the world your courage. My continued best in your journey where ever it takes you. Don’t doubt your limits, stay focused and continue to dream big.

    P.S. I hope the translation comes over correctly. : )

    Your digital friend,

    Aaron Pallares

    ———————————————————————————————————————————————————————————————————————–
    சந்தியா ராஜேந்திரன்,

    உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. நான் உங்கள் வாழ்க்கையைப் பற்றி படித்து மகிழ்ந்தேன், இது ஆரம்பம் மட்டுமே என்று நினைக்கிறேன். டிஜிட்டல் உலகில் இன்னும் நிறைய வர உள்ளது மற்றும் உருவாக்க இன்னும் நிறைய இருக்கிறது. எந்த தவறும் செய்ய வேண்டாம் தொழில்நுட்பத்தில் பெண்கள் அர்த்தத்துடன் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தி. உங்கள் சொந்த இயக்கம் நீங்கள் எந்த நபரின் வகுப்பை விளக்குகிறது. புலத்தில் ஆண்கள் “ஆதிக்கம் செலுத்தும்” கடலில் யாரும் இருக்க மாட்டார்கள். குழுவில் உள்ள ஒரே பெண்ணாக நீங்கள் பங்கேற்கும் அளவுக்கு தைரியமாக இருந்தீர்கள், இது உங்கள் தைரியத்தை உலகுக்கு காட்டுகிறது. உங்களை எங்கு அழைத்துச் சென்றாலும் உங்கள் பயணத்தில் எனது தொடரும் சிறந்தது. உங்கள் வரம்புகளை சந்தேகிக்க வேண்டாம், கவனம் செலுத்துங்கள் மற்றும் பெரிய கனவுகளை தொடரவும்.

    உங்கள் டிஜிட்டல் நண்பர்,

    ஆரோன் பல்லரேஸ்

Leave a Reply